ஐபிஎல் 2021: நான் ஓனராக இருந்திருந்தால் கோலியை இப்படி செய்ய விட்டிருக்க மாட்டேன் - பிரையன் லாரா!

Updated: Tue, Oct 12 2021 21:56 IST
If I Was RCB Owner, I Would Ask Kohli To Continue As The Captain: Brian Lara (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் ஆரம்ப காலத்தில் இருந்தே பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக மட்டுமே தற்போது வரை விராட் கோலி விளையாடி வருகிறார். கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து அவர் நடப்பு 14ஆவது ஐபிஎல் சீசன் வரை தொடர்ச்சியாக கேப்டனாக செயல்பட்டு வந்தார். இவரது தலைமையில் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு சென்றிருந்தாலும் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. ஒருமுறையாவது பெங்களூரு அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்து விட வேண்டும் என்று விராட் கோலி மிக உறுதியாக இருந்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்.சி.பி அணி கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது. இதன் காரணமாக மீண்டும் ஒரு முறை கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை கோலி தவிர விட்டுள்ளார். ஏற்கனவே இந்த தொடரில் இரண்டாம் பாதியில் தான் இந்த தொடரோடு பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், இனி வரும் தொடர்களில் அணியின் வீரராக விளையாட உள்ளதாகவும் கோலி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் எலிமினேட்டர் போட்டிக்குப் பின்னர் தான் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் கோலியின் இந்த முடிவு குறித்து பேசியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான பிரைன் லாரா கூறுகையில், “நான் மட்டும் பெங்களூரு அணியின் உரிமையாளராக இருந்திருந்தால் கோலியிடம் தனிப்பட்ட முறையில் பேசி மீண்டும் கேப்டன் பொறுப்பை தொடருமாறு சொல்லி இருப்பேன்.

ஏனெனில் ஒரு வீரராகவும், கேப்டனாகவும் அவர் சிறப்பாகவே செயல்பட்டு உள்ளார். மிகவும் திறமை வாய்ந்த அவர் இன்னும் சில ஆண்டுகள் பெங்களூர் அணிக்காக விளையாடுவார் என்பதனால் நிச்சயம் அவரே கேப்டனாக செயல்பட வற்புறுத்தி இருப்பேன். அது மட்டுமின்றி அவரை வேறு ஒரு வீரரின் தலைமையின் கீழ் விளையாடுவதை நான் பார்க்க மனமில்லை என்று கூறினார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : கோலி கேப்டனாக இல்லாத பெங்களூர் அணி எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. அதனால் தான் சொல்கிறேன் நான் ஓனராக இருந்திருந்தால் மீண்டும் ஒருமுறை அணியை மாற்றி அமைத்து கோலி கேப்டனாக விளையாட சொல்லி இருப்பேன்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை