உம்ரான் மாலிக் பாகிஸ்தானில் இருந்திருந்தால் இந்நேரம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியிருப்பார் - காம்ரன் அக்மல்!

Updated: Fri, May 13 2022 19:40 IST
If Umran Malik was in Pakistan maybe he would have played international cricket: Kamran Akmal (Image Source: Google)

ஐபிஎல் 2022 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அதிவேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக். 11 போட்டிகளில் பங்கேற்று 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 150 கி.மீக்கு மேலான வேகத்தில் பந்துவீசும் இந்த ஜம்மு காஷ்மீர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் நாடுகளை கடந்தும் பாராட்டுகளை குவித்து வருகிறது.

2008 ஐபிஎல் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்டர் கம்ரான் அக்மல், உம்ரான் மாலிக்கை வெகுவாகப் பாராட்டினார். உம்ரான் பாகிஸ்தானில் இருந்திருந்தால் இப்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியிருப்பார் என்று கூறினார். 

இதுகுறித்து பேசிய அவர், “முன்னதாக, இந்திய கிரிக்கெட்டில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை, ஆனால் இப்போது அவர்களிடம் நவ்தீப் சைனி, சிராஜ், முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் ஏராளமாக உள்ளனர். உமேஷ் யாதவ் கூட அழகாக பந்துவீசுகிறார். 10-12 சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இருப்பதால், இந்திய தேர்வாளர்களுக்கு யாரை தேர்வு செய்வது கடினமாகி வருகிறது.

உம்ரான் கடந்த சீசனில் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அவர் பாகிஸ்தானில் இருந்திருந்தால் நிச்சயம் எங்களுக்காக விளையாடியிருப்பார். ஆனால் ஒரு முழு ஐபிஎல் சீசனிலும் விளையாடும் வாய்ப்பை மாலிக்கிற்கு வழங்கியதன் மூலம் இந்திய கிரிக்கெட் மிகவும் முதிர்ச்சியைக் காட்டியது. 

பிரட் லீ மற்றும் ஷோயப் அக்தர் பாய் ஆகியோரும் அதிக ரன்களை வழங்கியுள்ளார்கள். ஆனால் அவர்கள் விக்கெட்டுகளை எடுத்தார்கள். ஸ்ட்ரைக் பவுலர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும். உம்ரான் ஒரு உண்மையான ஸ்ட்ரைக் பந்துவீச்சாளர்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை