இனியும் மெதுவாக விளையாடமாட்டேன் - ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. கொழும்பில் இன்று இரவு ஆஸ்திரேலியா இலங்கை அணிகள் முதல் டி20 ஆட்டத்தை விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இனிமேல் டி20 போட்டிகளில் ‘மெதுவாக விளையாடும் வீரர்’ என்ற பெயரை இல்லாமல் ஆக்குவேன் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,“உண்மையில் நான் ‘மிஸ்டர் பிக்ஸிட்’ என்ற பட்டத்தை அழிக்க விரும்புகிறேன். பயிற்சியாளர் திவா ஒருநாள் என்னிடம் கூறினார். நாம் அந்த பட்டத்தை அழிக்க வேண்டும். நீ இயல்பாக விளையாட வேண்டும். உனக்கு முதல் பந்திலோ இரண்டாவது பந்திலோ சிக்ஸர் அடிக்க தோன்றினால்கூட அடித்து விடு என்றார். எனக்கு அது பிடித்து இருந்தது.
இனிமேல் இயல்பாக விளையாடுவேன். என் உள்ளுணர்வை நம்புகிறேன். எல்லா போட்டிகளிலும் என்னால் நீண்ட நேரம் விளையாட முடியும். இனிமேல் மெதுவாக விளையாடி அவுட் ஆகமாட்டேன். அந்த பட்டத்தை அழிக்க விரும்புகிறேன்.
நான் விளையாடும் அந்த இடம் என்னை இயல்பாக விளையாட அனுமதித்தது இல்லை. மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் போன்ற வீரர்கள் இருக்கும்போது எனக்கு தானாகவே அழுத்தம் வந்து விடுகிறது. நான் பொதுவாக அப்படி விளையாட மாட்டேன். நான் நன்றாக விளையாடும்போது பொதுவாக கேப்பில் அடிக்க முயல்வேன். அதிகமாக பந்தை இழுத்து அடிக்க விரும்பமாட்டேன். அவுட் ஆகி விடுவோனோ அல்லது என்னால் அணி தோல்வியடைந்து விடுமோ என அதிகமாக யோசிக்க மாட்டேன்.
தலையில் அடிபட்ட போது எனக்கு கண்களை சரிசெய்யவே முடியவில்லை. அணியினர் என்னை சூழ்ந்து கொண்டனர். சில நாட்கள் வெர்டிகோவால் பாதிக்கப்பட்டேன். இனிமேல் தலையில் அடி வாங்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.