ஐஎல்டி20 2024: எமிரேட்ஸை 149 ரன்களில் சுருட்டியது டெஸர்ட் வைப்பர்ஸ்!
ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறற இப்போட்டியில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கு குசால் பெரேரா - முகமது வசீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குசால் பெரேரா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் வசீமுடன் இணைந்த ஆண்ட்ரே ஃபிளெட்சரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் வசீம் 19 ரன்களிலும், ஆண்ட்ரே ஃபிளட்செ 18 ரன்களும் எடுத்த நிலையில் லுக் வுட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் 17 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அம்பத்தி ராயுடு தனது பங்கிற்கு 23 ரன்களையும், அகீல் ஹொசைன் 24 ரன்களையும் எடுத்த நிலையில் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் டிம் டேவிட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சர்கள் என 28 ரன்களைச் சேர்த்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களைச் சேர்த்தது. டெஸர்ட் வைப்பர்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது அமீர் 3 விக்கெட்டுகளையும், லுக் வுட், மதீஷா பதிரானா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி விளையடாவுள்ளது.