ஐஎல்டி20 2024: கல்ஃப் ஜெயண்ட்ஸுக்கு 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது எமிரேட்ஸ்!

Updated: Wed, Feb 14 2024 21:53 IST
ஐஎல்டி20 2024: கல்ஃப் ஜெயண்ட்ஸுக்கு 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது எமிரேட்ஸ்! (Image Source: Google)

ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் புள்ளிப்பட்டியளின் முதலிரண்டு இடங்கைப் பிடித்த முமபை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கு முகமது வசீம் - குசால் பெரேரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முகமது வசீம் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஆண்ட்ரெ ஃபிளெட்சர் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான குசால் பெரேராவும் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க மும்பை அணி 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் - டுவைன் பிராவோ இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 36 ரன்களிலும், டுவைன் பிராவோ 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 30 ரன்கள் சேர்த்த நிலையிலும் என ஆட்டமிழந்தனர். 

பின்னர் இறுதியில் ஜோடி சேர்ந்த டிம் டேவிட் - கீரென் பொல்லார்ட் இணை அதிரடியாக விளையாடியதுடன் பவுண்டரிகளாக விளாசி அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தனர். இதில் டிம் டேவிட் 29 ரன்களில் ஆட்டமிழக்க, அதேசமயம் இறுதிவரை களத்தில் இருந்த கீரென் பொல்லார்ட் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 27 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை