ஐஎல்டி20: ஹேல்ஸ் அதிரடி சதம; டெஸர்ட் வைப்பர்ஸ் அபார வெற்றி!

Updated: Sat, Jan 21 2023 12:31 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தின் டி20 கிரிக்கெட் தொடரான ஐஎல்டி20 லீக்கின் முதல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட்ரைடஸ் - டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வைப்பர்ஸ் அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான முஸ்தஃபா 8 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ஹேல்ஸுடன் இணைந்த கேப்டன் காலின் முன்ரோவும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதில் ஹேல்ஸ் சதமடிக்க, மறுமுனையில் முன்ரோவும் அரைசதம் கடந்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக அலெக்ஸ் ஹேல்ஸ் 110 ரன்களையும், காலின் முன்ரோ 56 ரன்களையும் சேர்த்தனர்.

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியில் பிராண்டன் கிங், கென்னர் லூயிஸ், தனஞ்செய டி சில்வா, காலின் இங்ராம், சரித் அசலங்கா, கேப்டன் சுனில் நரைன் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

அதன்பின் களமிறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடியாக விளையாடி 5 பவுண்டரி, 5 சிக்சரகளை பறக்கவிட்டு 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஆனாலும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 15.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதில் சதமடித்து அசத்திய அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை