ஐஎல்டி20: ஜோ கிளார்க் அதிரடியில் நைட் ரைடர்ஸ் அணி வெற்றி!

Updated: Sun, Feb 05 2023 11:12 IST
Image Source: Google

ஐஎல்டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் - அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் மாலன் 7 ரன்களிலும், லூயிஸ் 23, மொயீன் அலி 9, ஸ்டொய்னிஸ் 6 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மறுமுனையில் அரைசதம் மடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கொஹ்லர் காட்மோர் 46 ரன்களில் ஆட்டமிழந்து அரசதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்காதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை மட்டுமே சேர்ந்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் மதியுல்லா கான்     2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அபுதாபி அணியின் தொடக்க வீரர்கள் ஜோ கிளார்க் - பால் ஸ்டிர்லிங் இணை அபாரமாக விளையாடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் அதிரடியாக விளையாடிய ஜோ கிளார்க் அரைசதம் கடந்த கையோடு 54 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் பால் ஸ்டிர்லிங்கும் 39 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதன்பின் களமிறங்கிய பிராண்டன் கிங், ஆண்ட்ரெ ரஸல், சரித் அசலங்கா ஆகியோர் விக்கெட்டை இழந்தாலும், 16.4 ஓவர்களில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை