இந்திய அணி இந்த விஷயத்தில் மேம்பட வேண்டும் - ராகுல் டிராவிட்!

Updated: Sun, Jan 02 2022 21:39 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும்  3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜஹன்னஸ்பர்கில் நாளை தொடங்குகிறது. 

இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “ஐசிசி பல முயற்சிகளை மேற்கொள்கிறது. அபராதங்கள் விதிக்கிறது. மிகக்கடினமாக சில விஷயங்களை முயற்சிக்கிறது ஐசிசி. எங்கு, எப்படி நேரம் வீணாகிறது என்பது கடினம். காயங்கள் ஏற்படுகின்றன, விக்கெட் விழுவதில் சில நேரம் பாதிக்கப்படுகிறது.. இப்படியாக பல காரணங்களால் நேரம் வீணாகிறது. எனவே நேர மேலாண்மையில் மேம்பட வேண்டும்.   

விதிகள் அனைவருக்கும் ஒன்றுதான். 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் விளையாடும் போது நேர மேலாண்மை செய்வது கடினம். பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக புள்ளிகளை இழந்தது மிகுந்த அதிருப்திக்குரிய விஷயம் தான். இந்தியாவில் விளையாடும் போது அந்த பிரச்னையில்லை. ஏனெனில் அதிகமாக ஸ்பின்னர்கள் தான் பந்துவீசுவார்கள். வெளிநாடுகளில் இந்த விஷயத்தை சரியாக நிர்வகிக்க வேண்டியிருக்கிறது” என்று தெரிவித்தார்.

இந்திய அணி இந்த விஷயத்தில் மேம்பட வேண்டும் - ராகுல் டிராவிட்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி எந்த விஷயத்தில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட வேண்டியிருக்கிறது என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார்.
 
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும்  3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜஹன்னஸ்பர்கில் நாளை தொடங்குகிறது. 

இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “ஐசிசி பல முயற்சிகளை மேற்கொள்கிறது. அபராதங்கள் விதிக்கிறது. மிகக்கடினமாக சில விஷயங்களை முயற்சிக்கிறது ஐசிசி. எங்கு, எப்படி நேரம் வீணாகிறது என்பது கடினம். காயங்கள் ஏற்படுகின்றன, விக்கெட் விழுவதில் சில நேரம் பாதிக்கப்படுகிறது.. இப்படியாக பல காரணங்களால் நேரம் வீணாகிறது. எனவே நேர மேலாண்மையில் மேம்பட வேண்டும்.   

விதிகள் அனைவருக்கும் ஒன்றுதான். 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் விளையாடும் போது நேர மேலாண்மை செய்வது கடினம். பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக புள்ளிகளை இழந்தது மிகுந்த அதிருப்திக்குரிய விஷயம் தான். இந்தியாவில் விளையாடும் போது அந்த பிரச்னையில்லை. ஏனெனில் அதிகமாக ஸ்பின்னர்கள் தான் பந்துவீசுவார்கள். வெளிநாடுகளில் இந்த விஷயத்தை சரியாக நிர்வகிக்க வேண்டியிருக்கிறது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை