ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் கம்பேக் கொடுத்த ஸ்டோக்ஸ்!

Updated: Mon, Oct 25 2021 18:57 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. 

அதன்படி டிசம்பர் 8ஆம் தேதி ஆரம்பிக்கும் ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. அதேபோல் மகளிர் ஆஷஸ் டெஸ்ட் கான்பெர்ராவில் ஜனவரி 27 அன்று தொடங்குகிறது. 

முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் தொடர்களில் 33இல் ஆஸ்திரேலியாவும் 32இல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. 

இந்நிலையில் நடப்பாண்டிற்கான ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். 

நான்கரை மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத பென் ஸ்டோக்ஸ், காயத்திலிருந்து மீண்டு நல்ல உடல்நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து ஆஷஸ் தொடருக்கான அணியில் அவரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது. 

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

இதுகுறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ், “என்னுடைய மனநலம் தொடர்பாக ஓய்வெடுத்தேன். என்னுடைய விரலில் ஏற்பட்ட காயத்தைச் சரிசெய்துவிட்டேன். என்னுடைய அணி வீரர்களைச் சந்திக்க ஆவலாக உள்ளேன். அவர்களுடன் இணைந்து விளையாட வேண்டும். ஆஸ்திரேலியா செல்ல நான் தயார்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை