PAK vs AUS, 2nd Test (Day 3, Lunch): ஆஸி., 556 ரன்களில் டிக்ளர்; பாகிஸ்தான் தடுமாற்றம்!

Updated: Mon, Mar 14 2022 13:10 IST
Imam-ul-Haq and Azhar Ali take Pakistan to lunch at 38/1, trailing Australia by 518. (Image Source: Google)

பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சில் நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 556 ரன்களில் டிக்ளர் செய்து அசத்தியது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 160, அலெக்ஸ் கேரி 93 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஃபஹீம் அஷ்ரஃப், சஜித் கான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபிக் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார். 

பின்னர் ஜோடி சேர்ந்த இமாம் உல் ஹக் - அசார் அலி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை இழப்பை தடுத்தனர். 

இதன்மூலம் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 38 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து 518 ரன்கள் பின் தங்கியுள்ள இந்நிலையில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸை தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை