இம்பாக்ட் பிளேயர் விதி அணிகளின் வியூகத்திற்கு அதிக மதிப்பை அளிக்கிறது: அஸ்வின்

Updated: Wed, Aug 28 2024 13:34 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து 18ஆவது சீசனுக்கான வேலைகளை ஐபிஎல் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்க்கியுள்ளன. ஏனெனில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் முழுவதுமாக கலைக்கப்பட்டு, வீரர்களுக்கான மெகா ஏலம் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த தொடரின் மீதான கூடுதல் எதிர்பார்ப்புளும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சமீப காலங்களாகவே ஐபிஎல் தொடரில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும், மெகா ஏலத்தில் என்ன விதிகள் வர வேண்டும், பழைய விதிகளில் உள்ள பிரச்சனை, வீரர்களுக்கான ஒப்பந்தம், இம்பேக்ட் பிளேயர் விதி மற்றும் ரிடென்ஷன் விதி என்று ஏராளமான விஷயங்கள் குறித்து தனது யூடியூப் பக்கத்தில் ரசிகர்களுடன் பேசி வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்துடன், ரவிச்சந்திரன் ஆஸ்வின் யூடியூப் பக்கத்தில் இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து விவாதத்தில் ஈடுபட்டார். முன்னதாக ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதியானது அவசியம் தேவை என்று கூறிய நிலையில், முன்னாள் வீரரான கிருஷ்ணமச்சாரி ஸ்ரீகாந்த் இம்பேக்ட் பிளேயர் விதியின் மூலம் ஒரு சில வீரர்கள் மட்டுமே பயனடைந்து வருகிறார்கள் என்று கூறி, அந்த விதியை நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாகவே இவர்கள் இருவரும் இணைந்து விவாதிக்கும் வகையில் ஒருசேர தங்களுடைய யூடியூப் பக்கத்தில் பேசினர். அப்போது இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து பேசிய அஸ்வின், “இம்பாக்ட் பிளேயர் விதி மிகவும் மோசமாக இல்லை என்று நான் ஏன் நினைக்கிறேன், ஏனெனில் இது அணியின் யுக்திக்கு தேவையான மதிப்பை அளிக்கிறது. ஆனால் சிலர் இந்த விதியின் மூலம் ஆல் ரவுண்டர்களை இது வரவிடாமல் செய்கிறது என்று கூறிவருகின்றனர். 

ஆனால் என்னைப் பொறுத்தவரையில் ஆல் ரவுண்டர்களை யாரும் தடுக்கவில்லை. மாறாக தற்போதுள்ள பேட்டர்கள் யாரும் பயிற்சியில் கூட பந்துவீச ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் இம்பாக்ட் ப்ளேயர் விதியின் காரணமாக ஆல் ரவுண்டர்கள் உருவாவது தடைபடுகிறது என்ற கருத்தினை என்னால் ஏற்கமுடியாது. என்னைப் பொறுத்தவரையில் இந்த விதியின் மூலம் அணிகள் மட்டுமின்றி, இளம் வீரர்களுக்கும் இது விளையாடும் வாய்ப்பை கொடுத்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

இருப்பினும் அஸ்வினின் இந்த கருத்தானது கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்திற்கு ஏற்றதாக இல்லை. அவர் தொடர்ந்து தனது நிலைப்பாட்டிலேயே, அதாவது இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை ஐபிஎல் தொடரில் இருந்து நீக்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்தார். இறுதியில் இருவரும் இதுகுறித்து விவாதிப்பதை நிறுத்திவிட்டு, அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்து விவாதிக்க தொடங்கினர். இருப்பினும் அஸ்வினின் இந்த கருத்தானது தற்சமயம் பேசுபொருளாக மாறிவருவது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை