ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி குயின்ஸ்லேண்டில் நடைபெற்று முடிந்தது. இரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி முடிவின்றி டிராவில் முடிந்தது.
Advertisement
மேலும் இப்போட்டியில் இந்திய அணி தரப்பில் சதமடித்து அசத்திய ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
Advertisement
இந்நிலையில் இந்தியாவுக்காக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது நம்ப முடியாத அனுபவமாக இருந்ததாக தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பகலிரவு டெஸ்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியது நம்பமுடியாத அனுபவமாக இருந்தது. எங்கள் முழு அணியின் செயல் திறன். உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் மிகவும் பெருமைப்படுகிறோம் மற்றும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.