ஆஸ்திரேலிய வீரர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய இலங்கை ரசிகர்கள்!

Updated: Sat, Jun 25 2022 12:24 IST
Image Source: Google

இலங்கை சென்ற ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதல் நான்கு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இலங்கை 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இதற்குமுன் 1992ஆம் ஆண்டில்தான் இலங்கை, ஆஸிக்கு உள்நாட்டில் ஒருநாள் தொடரை வென்றிருந்தது.

இந்நிலையில் கடைசிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றி இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணியில் முதல் வரிசை, மிடில் வரிசை பேட்ஸ்மேன்களில் யாருமே பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அதிகபட்சமாக குஷல் மெண்டீஸ் 26 (40) ரன்களை சேர்த்திருந்தார். குணதிலகா (8), பதும் நிஷங்கா 2 (4), ஷனகா 1 (3) போன்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே எடுத்தார்கள். இதனால் இலங்கை அணி 85/8 என திணறியது.

இதனைத் தொடர்ந்து 8ஆவது இடத்தில் களமிறங்கிய கருணரத்னே அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தார். இவருக்கு உறுதுணையாக வன்டர்சே 4 (23), மதுசன் 15 (52) ஆகியோர் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இறுதியில் கருணரத்னே 75 (75) ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால், இலங்கை அணி 43.1 ஓவர்களில் 160/10 ரன்களை சேர்த்தது.

எளிய இலக்கை துரத்திக் களமிறங்கிய ஆஸி அணியில் வார்னர் 10 (8), ஆரோன் பிஞ்ச் 0 (3), ஜோஸ் இங்லிஸ் 5 (10) போன்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒதடர்ந்து மிட்செல் மார்ஷ் 24 (50), லபுஷேன் 31 (58), அலேக்ஸ் ஹேரி 45 (65), கிளென் மேக்ஸ்வெல் 16 (17), கிரீன் 25 (26) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், ஆஸ்திரேபிய அணி 39.3 ஓவர்களில் 164/6 ரன்களை சேர்த்து, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இப்போட்டி நடந்து முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்க மைதானத்திற்குள் வந்தனர். அப்போது ஆஸி வீரர்கள் அனைவரும் வந்ததும், ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா என ரசிகர்கள் அனைவரும் முழக்கமிடத் துவங்கினர். காரணம், இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தபோதும், சில நேரங்களில் அசாதாரண நிலை நிலவியபோதும் ஆஸி அணி, இலங்கை வர சம்மதம் தெரிவித்திருந்தது. 

 

இந்த நன்றி உணர்வோடுதான், ரசிகர்கள் ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா என முழக்கமிட்டு நன்றி தெரிவித்தனர். இதனை கண்ட ஆஸி வீரர்களில் வார்னர் போன்றவர்கள் பெவிலயனுக்கு அருகில் நின்று, நெஞ்சில் கைவைத்து அன்புக்கு நன்றி எனத் தெரிவித்துவிட்டு சென்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை