முதலில் பந்து வீசும் போது எனக்கு கொஞ்சம் பதற்றமாக இருந்தது - குல்தீப் யாதவ்!

Updated: Thu, Dec 15 2022 22:13 IST
IND V BAN, 1st Test: Trying To Be A Bit Better With Rhythm, Which Helps In Pace, Turn, Says Kuldeep (Image Source: Google)

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக பந்து வீசி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 404 ரன்களை குவித்தது. இதனை அடுத்து களமிறங்கிய வங்கதேச பேட்ஸ்மேன்கள், இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தது.

தற்போது அந்த அணி இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 133 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்து தவிக்கிறது. இதனால் வங்கதேச அணி இந்திய அணியை விட 271 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. இன்னும் மூன்று நாட்கள் மிஞ்சி உள்ளதால் இந்தியாவின் வெற்றி பிரகாசமாக உள்ளது. அதிலும் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

குல்தீப் பந்துவீச்சை கொஞ்சமும் எதிர்கொள்ள முடியாமல் வங்கதேச வீரர்கள் குறிப்பாக ஷகிபுல் ஹசன் தன்னுடைய விக்கெட்டை குல்தீப் முதல் ஓவரிலேயே இழந்தார். இது குறித்து செய்தியாளரிடம் பேசிய குல்தீப் யாதவ், “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் முதலில் பந்து வீசும் போது எனக்கு கொஞ்சம் பதற்றமாக இருந்தது.

ஆனால் முதல் ஓவரில் என்னுடைய முதல் விக்கெட்டை வீழ்த்தியதால் நான் கொஞ்சம் உத்வேகத்தை பெற்றேன். நிச்சயமாக அது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். அதன் பிறகு நான் என்னுடைய பழைய முறையில் பந்து வீச முயற்சி செய்தேன். பந்தின் வேகம் மற்றும் வித்தியாசமான கோணங்களில் பந்து வீசு முயற்சி செய்தேன்.

இதன் மூலம் எனக்கு ஆடுகளத்தில் பந்து திரும்பியதும் அப்படி பந்து வீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.எனக்கு காயம் ஏற்பட்ட பொழுது நான் பந்தை வேகமாக வீச பயிற்சி செய்தேன். அது எனக்கு நல்ல பயனாக அமைந்தது. பந்தின் வேகத்திற்காக பந்தை சுழற்றுவதை நான் விட்டு கொடுக்கவில்லை.

முதலில் நான் பேட்டிங் செய்யும்போது ஆடுகளத்தில் சுழற் பந்துவீச்சுக்கு எதுவும் இல்லை என்று தான் நினைத்தேன்.ஏனென்றால் பேட்டிங் செய்யும்போது எனக்கு எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை.பேட்டிங் செய்யும்போது ரன் குவிக்க ஏதுவாக ஆடுகளம் இருந்தது. மேலும் லேக் ஸ்பின்னர்கள் எப்போதுமே இது போன்ற ஆடுகளத்தில் கூக்கபுரா பந்தை பயன்படுத்தி நன்றாக திருப்ப முடியும். அதை தான் நான் இன்று செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை