BAN vs IND 2nd ODI: சதமடித்தது குறித்து மெஹிதி ஹசன் ஓபன் டாக்!

Updated: Thu, Dec 08 2022 11:10 IST
Image Source: Google

வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வங்கதேசத்தின் தாக்காவில் நடைபெற்றது.

தொடரை வெல்ல இரு அணிகளுக்குமே முக்கியமான இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 69 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், மெஹ்தி ஹசன் (100*) மற்றும் மஹ்மதுல்லா (77) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்தது.

அதன்பின் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு விராட் கோலி (5) மற்றும் ஷிகர் தவான் (8) ஆகியோர் பெரிய ஏமாற்றம் கொடுத்தனர். அதன்பின் களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் 82 ரன்களும், அக்‌ஸர் பட்டேல் 56 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

கடைசி ஓவரை எதிர்கொண்ட ரோஹித் சர்மா அந்த ஓவரில் 14 ரன்கள் குவித்தாலும், கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை என்ற போது அந்த பந்தில் ரன் எதுவும் எடுக்காததால் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது. இந்தநிலையில், இப்போட்டியில் சதமடித்தது பற்றியும், அதற்கு மஹ்மதுல்லாவின் பார்ட்னர்ஷிப் குறித்தும் மெஹிதி ஹசன் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய மெஹிதி ஹசன, “அவர் (மஹ்மதுல்லா) ஒரு மூத்த வீரர், நாங்கள் ஒரு கூட்டாண்மையை உருவாக்க விரும்பினோம். நாங்கள் இன்னிங்ஸில் ஆழமாக விளையாட வேண்டும் என்று அவர் என்னிடம் தொடர்ந்து கூறினார், மேலும் உரையாடல்கள் பெரும்பாலும் பார்ட்னர்ஷிப்களின் சிறிய இலக்குகளை வைத்திருப்பது பற்றி மட்டுமே இருந்தது.

அதிலும் இப்போட்டியில் சதமடித்தது பெரும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. இதைச் செய்ய எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்ததற்காக எல்லாப் புகழும் கடவுளுக்கே உரித்தானது. வேறொன்றும் சொல்வதற்கில்லை. கடந்த சில வருடங்களாக நான் கடினமாக உழைத்தேன், குறிப்பிட்ட பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் எப்படி விளையாடுவது என்பது குறித்து பயிற்சியாளர் எனக்கு நிறைய தகவல்களைத் தருகிறார். அதற்கேற்றது போல் நான் எனது விளையாட்டை மேம்படுத்தி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை