இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் மயங்க் அகர்வால் 13, சுப்மன் கில் 52, புஜாரா 26, ரஹானே 35 என தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

Advertisement

இதையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் - ரவீந்திர ஜடேஜா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தியது.

அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்தார். அவருடன் இணைந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜாவும் அரைசதம் அடித்து அசத்தினார். 

இதன்மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 75 ரன்களுடனு, ரவீந்திர ஜடேஜா 50 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

நியூசிலாந்து அணி தரப்பில் கைல் ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும், டிம் சௌதி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News