தனது திறமையின் மூலம் தேர்வு குழுவுக்கு பதிலடி கொடுத்த சஞ்சு சாம்சன்!

Updated: Fri, Oct 07 2022 10:20 IST
IND v SA, 1st ODI: I fell short by two shots, says Sanju Samson (Image Source: Google)

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 40 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்களை அடிக்க, இந்திய அணி 240 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக தான் இருந்தது. இதற்கு காரணம் சஞ்சு சாம்சனின் ஆட்டம் தான். கடின இலக்கை துரத்திய இந்திய அணி 51 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது வந்த சஞ்சு சாம்சன், பொறுப்புடன் இந்திய அணியை கடைசி வரை அழைத்துச் சென்றார்.

ஒருபுறம் ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர் அதிரடி காட்ட, மறுமுணையில் சஞ்சு சாம்சன் தூண் போல நிலைத்து நின்றார். இதனால் கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை என்ற சூழலில் கூட தோனியை போல சகஜமாக நின்று பவுண்டரிகளை பறக்கவிட்டார். எனினும் 9 ரன்கள் பற்றாக்குறையாக சென்றது. கடைசி வரை நின்ற சாம்சன் 63 பந்துகளில் 86 ரன்களை விளாசினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவரது 2ஆவது அரைசதமாகும்.

இந்த ஆட்டத்தின் மூலம் பிசிசிஐ தேர்வு குழுவுக்கு மீண்டும் நெருக்கடி உருவாகியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் சாம்சன் ஒதுக்கப்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதற்கு நியூசிலாந்து ஏ அணியுடனான தொடரில் பதிலடி கொடுத்திருந்த சஞ்சு சாம்சன், தற்போது தென்னாப்பிரிக்காவுடனும் அசத்தியுள்ளார். 

இதனால் இனி வரும் தொடர்களில் சாம்சனுக்கு வாய்ப்பு கொடுத்தே தீர வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்திய அணி அடுத்ததாக டி20 உலகக்கோப்பையில் களமிறங்குகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் நியூசிலாந்து அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. எனவே இந்திய அணியின் முக்கிய தொடர்கள் அனைத்திலும் சஞ்சு சாம்சனுக்கு இடம் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்போட்டி முடிந்த பேசிய சஞ்சு சாம்சன், “நான் விக்கெட்டில் நேரத்தை செலவிட விரும்புகிறேன். நீங்கள் இந்திய ஜெர்சியை அணிந்தவுடன், அது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மாறும். நாங்கள் வெற்றி பெற விளையாடுகிறோம். ஆனால் அதனை இரண்டு ஷாட்களில் தவறவிட்டோம். ஒட்டுமொத்தமாக, எனது பங்களிப்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் சரியாக பந்துவீசாத தப்ரைஸ் ஷம்சியை குறிவைக்க திட்டமிட்டேன். கடைசியில் அவர் ஒரு ஓவர் வீசுவார் என்பது எனக்குத் தெரியும். கடைசி ஓவரில் 24 ரன்கள் எடுக்க நான் துணை நின்றேன். கடைசி ஓவரில் நான்கு சிக்ஸர்கள் அடிப்பேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனாலும் எங்களால் இலக்கை எட்ட முடியாதத்து வருத்தமளிக்கிறது” என தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை