IND vs SA, 1st T20I: வெற்றிக்குப் பின் பந்துவீச்சாளர்களை பாராட்டி தள்ளிய ரோஹித் சர்மா!

Updated: Thu, Sep 29 2022 09:41 IST
IND v SA, 1st T20I: Getting five wickets in quick time was the turning point, says Rohit Sharma (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆடுகளம் வேகபந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட்டதால் பேட்ஸ்மேன்கள் ரண்குவிக்க சிரமப்பட்டனர்.

குறிப்பாக இந்திய அணி வீரர் ஆர்ஷ்தீப் சிங், தீபக் சஹார் ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்து வீசியதில் தென்னாப்பிரிக்கா அணி 9 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட் இழந்து தடுமாறியது. இந்திய அணி பேட்டிங் செய்யும்போதும் சிரமப்பட்டது. எனினும் கே எல் ராகுல் சூரியக்குமாறு யாதவ் ஆகியோர் அரை சதம் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 

இந்த நிலையில் போட்டி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “ஆடுகளம் மிகவும் கடினமாக இருந்தது. இது போன்ற ஆட்டத்தில் விளையாடும் போது நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். கடினமான சூழ்நிலையில் ஒரு அணி எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளலாம். 

அதனால் இந்த போட்டி மிகவும் முக்கியமானது. பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கும் என்று முதலில் எதிர்பார்த்தோம். ஆனால் ஆட்டம் முழுவதும் பந்துவீச்சாளர்கள் கையே ஓங்கி இருக்கும் என்று நினைக்கவில்லை.

சொல்லப்போனால் இரண்டு அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணி வெற்றி பெற்றது. நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு, சிறிது நேரத்தில் முதல் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினோம். ஆட்டத்தின் திருப்புமுனை அதுதான். பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும்போது எப்படி செயல்பட வேண்டும் என்பது இன்றைய போட்டி சிறந்து எடுத்துக்காட்டு.

107 ரன்களை துரத்துவது எளிதாக இருக்காது என்று எங்களுக்கு தெரியும். ஆடுகளம் சிறப்பாக இல்லை. அதற்கு மதிப்பு கொடுத்து விளையாட வேண்டும். முதலில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தோம். பிறகு கே எல் ராகுல் சூர்யா, குமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து எங்களுக்கு வெற்றியை தேடிக் கொடுத்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை