டெஸ்ட் தொடரிலிருந்து டெம்பா பவுமா விலகல்; டீன் எல்கர் கேப்டனாக நியமனம்!

Updated: Fri, Dec 29 2023 11:13 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. 

இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் பங்கேற்றார். முதல் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போது 19ஆவது ஓவரிலேயே அவருக்கு இடது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

இதை அடுத்து முதல் டெஸ்ட் போட்டி முழுவதும் ஃபீல்டிங் செய்யவோ, பேட்டிங் செய்யவோ வரவில்லை. அவருக்கு பதிலாக மூத்த வீரர் டீன் எல்கர் கேப்டன் பொறுப்பை பெற்று அணியை வழி நடத்தினார். இந்தியஅணியை 245 ரன்களுக்கு ஆல் - வுட் செய்த தென் ஆப்பிரிக்கா, முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கில் டெம்பா பவுமா இல்லாத நிலையில் 408 ரன்கள் குவித்தது.

அடுத்து இந்திய அணியை 131 ரன்களுக்கு ஆல் - அவுட் செய்து இன்னிங்க்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்த உடன் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் டெம்பா பவுமா காயம் காரணாமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்படுவதாக கூறி இருந்தது.

மேலும், தன் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள டீன் எல்கரை கேப்டனாக நியமித்து இருக்கிறது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். டீன் எல்கர், இந்த டெஸ்ட் தொடருடன் தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், டீன் எல்கருக்கு கவுரவம் அளிக்கும் வகையில், அவருக்கு கேப்டன் பதவியை அளித்துள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பு.

டீன் எல்கர் முதல் டெஸ்ட்டில் 185 ரன்கள் குவித்து தன் கடைசி டெஸ்ட் தொடரை ஏற்கனவே மறக்க முடியாத ஒன்றாக மாற்றி இருக்கிறார். தற்போது அவருக்கு கேப்டன் பதவியும் அளிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, அவர் எப்படியும் அணியை வீழ்த்தி 2 - 0 என டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்ற வேண்டும் என போராடுவார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை