சச்சின், லாரா வரிசையில் விராட் கோலி!

Updated: Sat, Mar 11 2023 21:36 IST
IND Vs AUS, 4th Test: Kohli Becomes Fifth Indian Batter To Score 4000 Runs At Home (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, உஸ்மான் கவாஜா (180) மற்றும் கேமரூன் கிரீன்ன் (114) ஆகிய இருவரின் அபாரமான சதங்களால் முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் ஷுப்மன் கில் சதமடித்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய விராட் கோலியும் அரைசதம் கடக்க, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களைச் சேர்த்துள்ளது.

இந்நிலையில், இப்போட்டியில் அடித்த 42 ரன்கள் அடித்தபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய 5வது வீரர் என்ற சாதனையை படைத்தார் கோலி. இதற்கு முன் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக் ஆகிய நால்வரும் இந்த சாதனையை படைத்துள்ளனர். அவர்களுடன் இப்போது விராட் கோலியும் இணைந்துள்ளார். 

ஆனால் இதை விரைவில் எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கவாஸ்கர் 87 இன்னிங்ஸ்களிலும், டிராவிட் 88 இன்னிங்ஸ்களிலும், சச்சின் 78 இன்னிங்ஸ்களிலும் இந்த மைல்கல்லை எட்டியிருந்த நிலையில், 77 இன்னிங்ஸ்களில் 4000 ரன்களை எட்டி சாதனை படைத்துள்ளார் விராட் கோலி. மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவிற்கு  அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 2ம் இடத்தில் இருந்த பிரயன் லாராவை பின்னுக்குத்தள்ளி விராட் கோலி 2ம் இடத்தை பிடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை