IND vs AUS, 2nd Test: நங்கூரமாய் நின்ற க்ரீன், கவாஜா; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3ஆவது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது டெஸ்ட் ஆகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.
அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி உஸ்மான் கவாஜாவின் அபாரமான சதத்தின் காரணமாக முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை இதில் உஸ்மான் கவாஜா 104 ரன்களுடனும், கேமரூன் க்ரீன்49 ரன்களுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் அதிரடியாக விளையாடிய கேமரூன் க்ரீன் அரைசதம் கடந்து அசத்தினார்.
அவருடன் இணைந்து அபாரமாக விளையாடி வந்த உஸ்மான் கவாஜாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், தனது 150 ரன்களையும் கடந்து அசத்தினர். பின்னர் அதிரடியாக விளையாடிய கேமரூன் க்ரீனும் தனது சதத்தை நெருங்கி வருகிறார்.
இதன்மூலம் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்களை குவித்துள்ளது. இதில் உஸ்மான் கவாஜா 150 ரன்களுடனும், கேமரூன் க்ரீன் 95 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.