IND vs ENG, 1st ODI: பந்துவீச்சாளர்கள் அசத்தல்; இங்கிலாந்தை 248 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (பிப்ரவரி 6) நடைபெற்றது. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்ததார். இப்போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்கள் யஷஸ்வி ஜெய்வ்ஸால், ஹர்ஷித் ரானா ஆகியோர் பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்றனர்.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். தொடக்கத்தில் இருவரும் நிதானமாக விளையாடிய நிலையில், 5ஆவது ஓவருக்கு பிறகு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பில் சல்ட் 43 ரன்களிலும், பென் டக்கெட் 32 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஹாரி புரூக் ரன்கள் ஏதுமின்றியும், ஜோ ரூட் 19 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் இலங்கை அணி 111 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோஸ் பட்லர் - ஜேக்கப் பெத்தெல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியிலும் இறங்கினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் அரைசதம் கடந்தார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
அதன்பின் 52 ரன்களைச் சேர்த்த நிலையில் ஜோஸ் பட்லர் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் 5 ரன்களுக்கும், பிரைடன் கார்ஸ் 10 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதற்கிடையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்திய ஜேக்கப் பெத்தெலும் 51 ரன்களைச் சேர்த்த கையோடு தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஜோஃப்ரா ஆர்ச்சர் அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் ஆதில் ரஷித் 8 ரன்களில் நடையைக் கட்டினார்.
Also Read: Funding To Save Test Cricket
இறுதியில் சாகிப் மஹ்மூத் 2 ரன்களுடன் நடையைக் கட்ட, இங்கிலாந்து அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 21 ரன்களைச் சேர்த்திருந்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.