இந்திய அணியில் எனக்கான ரோல் இதுதான் - வெங்கடேஷ் ஐயர்
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்துள்ளது.
பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தப்போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் விளையாடி வருகிறார்.
இந்த போட்டிக்கு முன்பு பேசிய வெங்கடேசன் கூறுகையில், “ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தங்கள் நாட்டு அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஒரு இலக்கை நோக்கித்தான் விளையாடுகிறார்கள் அந்த வகையில் நான் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பினை பெற்றது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
ராகுல் டிராவிட் அவர்களின் தலைமையில் விளையாடுவது மிகவும் நல்ல உணர்வை கொடுக்கிறது. இந்த போட்டியில் விளையாட நான் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளேன். ஒரு கிரிக்கெட் வீரராக நாம் மிகவும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அந்த வகையில் இந்திய அணியில் எனக்கு எந்த ரோல் வழங்கினாலும் அதை நான் சிறப்பாக செய்ய காத்திருக்கிறேன்.
Also Read: T20 World Cup 2021
பேட்டிங்கில் எந்த இடத்தில் என்னை களம் இறங்கினாலும் நான் விளையாட தயாராக இருக்கிறேன். அதேபோன்று பந்துவீச என்னை அழைத்தால் தயங்காமல் வந்து விடுவேன். இதுதான் என்னுடைய ரோல். இந்திய அணியில் நான் எதை செய்ய வேண்டும் என்று அணியின் கேப்டன் கேட்டாலும் அதனை செய்ய தயாராக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.