இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த அணி, உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா செல்ல உள்ளது.

Advertisement

இதனால், ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் முற்றிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. இதில் இடம்பெற உள்ள ஐபிஎல் வீரர்கள் குறித்து முதலில் காணலாம். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய சதம் விளாசிய ரஜத் பட்டிதார், அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் கலக்கி வருகிறார். 

Advertisement

ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் டி20 உலககோப்பைக்காக ஆஸ்திரேலியா செல்ல உள்ளதால், ரஜத் பட்டிதார் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய திலக் வர்மா, மீது ஏற்கனவே அதீத எதிர்பார்ப்பு உள்ளது. 

இந்த நிலையில், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் திலக் வர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் திலக் வர்மாவை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சேர்க்க பிசிசிஐ வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு ஆர்சிபி வீரரான ஷாபாஸ் அகமது, இந்திய அணியின் ஆல்ரவுண்டராக இடம்பெற வாய்ப்புள்ளது. அக்சர் பட்டேல் உள்ளிட்டோர் டி20 உலக கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், ஷாபாஸ் அகமதுக்கு இந்திய ஒருநாள் அணியில் இடம் உறுதி என்று கருதப்படுகிறது. இதன் மூலம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் தனது திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்திய அணியிலிருந்து சமீப காலமாக ஓரங்கட்டப்பட்ட பிரித்வி ஷா, தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரில் மீண்டும் திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் பிரித்வி ஷா 48 பந்துகளில் 77 ரன்கள் விளாசி அசத்தினார். மேலும் சமீப காலமாக உள்ளூர் போட்டியிலும் பிரித்வி ஷா தனது திறமையை நிரூபித்து வருகிறார். இதனால் பிரித்வி ஷாவுக்கு இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

அதேபோல் டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனும் இந்த ஒருநாள் அணியில் இடம்பிடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் சுப்மன் கில்லிற்கும் இந்த ஒருநாள் தொடரில் வாய்ப்பளிக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News