IND vs SL, 1st T20I: ஏமாற்றிய டாப் ஆர்டர்; காப்பாற்றிய ஹூடா, அக்ஸர்!

Updated: Tue, Jan 03 2023 20:42 IST
Image Source: Google

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்களாக ஷுப்மன் கில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷான் முதல் ஓவரிலேயே பவுண்டரியும், சிக்சருமாக விளாசி அதிரடி தொடக்கத்தைக் கொடுத்தார். அதேசமயம் அறிமுக போட்டியில் களமிறங்கிய ஷுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழந்து தன் மீதான ஏதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் 7 ரன்களோடும், நீண்ட நாள்களுக்கு பின் இடம்பிடித்த சஞ்சு சாம்சன் 5 ரன்களிலும் பெரிய ஷாட்களுக்கு முயற்சி செய்து தங்களது விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா வந்தது முதல் பவுண்டரிகளாக விளாசி தள்ளினார்.

ஆனால் மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷான் 37 ரன்களோடு ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியாவும் 22 ரன்களோடு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா - அக்ஸர் படேல் இணை பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

ஒரு கட்டத்திற்குமேல் இருவரும் அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட, அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதனால் 29 பந்துகளில் இருவரும் இணைந்து 50 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையில் அமைத்து அணிக்கு வலிமையான இலக்கை நிர்ணயிக்க உதவினர்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தீபக் ஹூடா 23 பந்துகளில் 4 சிக்சர், ஒரு பவுண்டரி என 41 ரன்காளைச் சேர்த்தார். அக்ஸர் படேல் 20 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 31 ரன்களைச் சேர்த்திருந்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை