இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி லக்னோவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணி இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 89 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 57 ரன்களையும் சேர்த்து அசத்தினர்.

இதையடுத்து இலக்கை துரத்திய இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிஷங்கா, புவனேஷ்வர் குமார் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய கமிலி மிஷ்ரா, ஜெனித் லியாங்கே , தினேஷ் சண்டிமல், தசுன் ஷன்கா, சமிகா கருணரத்னே என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். 

இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் சலங்கா அரைசதம் கடந்தார். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. 

Advertisement

இந்திய அணி தரப்பில் வெங்கடேஷ் ஐயர், புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News