இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி லக்னோவில் இன்று நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - இஷான் கிஷன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் மூலம் 5.2 ஓவர்களிலேயே இந்திய அணி 50 ரன்களைக் கடந்தது.
தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷான் 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன்மூலம் இவர்களது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது.
அதன்பின் மறுமுனையில் அரைசதம் கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷான் 89 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 25 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். பின் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 58 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 199 ரன்களைச் சேர்த்தது.