IND vs SL, 1st Test (Day 1): சதத்தை தவறவிட்ட ரிஷப் பந்த்; வலிமையான நிலையில் இந்தியா!

Updated: Fri, Mar 04 2022 17:10 IST
Image Source: Google

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - மயங்க் அகர்வால் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ரோஹித் 29 ரன்களில் ஆட்டமிழக்க, மயங்க் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அடுத்து ஜோடி சேர்ந்த விஹாரி - விராட் கோலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் விஹாரி அரைசதம் கடக்க, விராட் கோலி 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத் தொடர்ந்து ஹனுமா விஹாரி 58 ரன்கலிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த் தொடக்கத்தில் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். 

அவருடன் இணைந்த ரவீந்திர ஜடேஜாவும் சில பவுண்டரிகளை விராட்டி ஸ்கோரை உயர்த்தினார். அதன்பின் எம்பில்தெனியா வீசிய 76ஆவது ஓவரில் ரிஷப் பந்த் 2 சிக்சர், 2 பவுண்டரிகளை விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அதனைத் தொடர்ந்து அவர் சந்திந்த அனைத்து ஓவர்களிலும் பவுண்டரிகளை விளாசி ராக்கெட் வேகத்தில் ஸ்கோரை உயர்த்தினார்.

இதன்மூலம் ரிஷப் பந்த் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 ரன்களில் கிளீன் போல்டாகி 4 ரன்களில் சதத்தை தவறவிட்டார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்தாவது முறையாக சதமடிக்கும் வாய்ப்பை ரிஷப் பந்த் தவறவிட்டார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா - ரவிச்சந்திரன் அஷ்வின் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.

இதன்மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 45 ரன்களுடனும், ரவிச்சந்திரன் அஸின் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இலங்கை தரப்பில் லசித் எம்பல்தெனியா 2 விக்கெட்டுகளையும், சுரங்கா லக்மல்,விஷ்வா ஃபெர்னாண்டோ, லஹிரு குமாரா, தனஞ்செய டி சில்வா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை