இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலில் நடைபெற்று வருகிறது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரவீந்திர ஜடேஜாவின் அபார ஆட்டத்தினால் 574 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 175 ரன்களுடன் ஆட்டமிழக்கமால் இருந்தார். மேலும் ரிஷப் பந்த் 96 ரன்களையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 61 ரன்களையும் சேர்த்தனர். 

Advertisement

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் பதும் நிஷங்கா 26 ரன்களுடனும், சரித் அசலங்கா ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து 466 ரன்கள் பின் தங்கிய நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணியில் பதும் நிஷங்கா அரைசதம் கடந்தார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் ஜடேஜாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதன்மூலம் 174 ரன்களில் இலங்கை அணி ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் ஆனது. இலங்கை அணி தரப்பில் பதும் நிஷங்கா ஆட்டமிழக்காமல் 61 ரன்களை எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின், பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News