IND vs SL, 2nd Test (Day 1, Tea): பேட்டர்களை அலறவிட்ட இலங்கை பந்துவீச்சாளர்கள்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா - மயங்க் அகர்வால் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மயங்க் அகர்வால் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சித்த ரோஹித் சர்மா 15 ரன்களில் எம்புதெனியாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரி - விராட் கோலி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினர்.
இதில் ஹனுமா விஹாரி 31 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி மிரட்டினார்.
அதைத்தொடர்ந்து 23 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி, தனஞ்செய டி சில்வா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனால் முதல்நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.