IND vs SL, 2nd Test (Day 2 Tea): வலிமையான நிலையில் இந்திய அணி!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக பெங்களூருவில் நடைபெற்றுவருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணி இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் அந்த அணி 109 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 143 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 61 ரன்களைச் சேர்த்துள்ளது.
இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோஹித் சர்மா 30 ரன்களுடனும், ஹனுமா விஹாரி 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.