ஐந்தாண்டுகளுக்கு பிறகு சரிவை சந்தித்த விராட் கோலி!

Updated: Mon, Mar 14 2022 11:56 IST
IND vs SL: Backfoot play pegs back Virat Kohli’s average (Image Source: Google)

இந்திய வீரர் விராட் கோலி இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் 2ஆவது இன்னிங்சிலும் விராட் கோலி (13 ரன், 16 பந்து) அதே போன்று எல்.பி.டபிள்யூ., முறையில் விக்கெட்டை தாரை வார்த்தார். 

அதாவது சுழற்பந்து வீச்சாளர் ஜெயவிக்ரமா வீசிய பந்து ஓரளவு எழும்பி வரும் என்று நினைத்தார். ஆனால் கால்முட்டிக்கும் கீழ் தாழ்வாக ஓடிய அந்த பந்து காலில் பட்டு எல்.பி.டபிள்யூ.க்கு வித்திட்டது.

குறைந்த ரன்னில் வீழ்ந்ததால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சராசரி 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று 50 ரன்களுக்கு கீழ் சென்றது. இதுவரை 101 டெஸ்டில் விளையாடியுள்ள விராட் கோலி 27 சதம் உள்பட 8,043 ரன்கள் (சராசரி ரன் 49.95 ) எடுத்துள்ளார். ஒருவேளை இந்த இன்னிங்சில் அவர் 20 ரன்னுக்கு மேல் எடுத்திருந்தால் 50 ரன் சராசரியை தக்க வைத்திருப்பார்.

மேலும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் கண்டு 28 மாதங்கள் உருண்டோடி விட்டது. இனி ஐபிஎல் தொடர்  வரப்போவதால் அடுத்த சர்வதேச சதத்திற்கான வாய்ப்பை பெற ஜூன் மாதம் வரை காத்திருக்க வேண்டியது தான்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை