IND vs SL: இரவுநேர பயிற்சியில் களமிறங்கிய தவான் & கோ!
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 18ஆம் தேதி கொழும்பிவில் நடக்கிறது.
இந்நிலையில் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். ஏற்கெனவே தவான் தலைமையிலான இந்திய அணி இரு குழுக்களாக பிரிந்து பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வந்தது.
இந்நிலையில் இத்தொடரின் மூன்று ஒருநாள் போட்டிகளும் பகலிரவு ஆட்டமாகவும், டி20 போட்டிகள் இரவு நேர ஆட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் இன்று இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய அணி வீரர்கள் இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படங்களை பிசிசிஐ தனது ட்விட்டர் கப்பதில் வெளியிட்டுள்ளது. பிசிசிஐயின் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.