IND vs SL: டிக்ளர் குறித்து பேசிய ஜடேஜா!

Updated: Sat, Mar 05 2022 21:14 IST
Image Source: Google

இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் மொஹாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரவீந்திர ஜடேஜா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் விளாசினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்துள்ளது.

இதன்பிறகு, காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜடேஜா டிக்ளேர் திட்டம் பேசினார். 

அப்போது அவர் "அணி ஓய்வறையிலிருந்து செய்திகள் வந்தபோது, பந்து எழாமல் வரத் தொடங்கிவிட்டது என்றும் திரும்பத் தொடங்கிவிட்டது என்றும் நானும் அவர்களிடம் கூறினேன். களத்தில் சில நிகழ்வுகள் ஏற்படத் தொடங்கிவிட்டதால், அவர்களை பேட்டிங் செய்ய அனுப்புவது சரியாக இருக்கும் என நான் செய்தி அனுப்பினேன். ஒன்றரை நாள் பீல்டிங் செய்ததால், அவர்களது பேட்டர்கள் சோர்வாக இருப்பார்கள். 

நீண்ட நேரம் களத்திலிருந்து பெரிய ஷாட்களை ஆடுவது அவர்களுக்கு எளிதானதாக இருக்காது. முடிந்தளவுக்கு துரிதமாக ரன் குவித்து, டிக்ளேர் செய்தால், சோர்வடைந்துள்ள அவர்களது பேட்டர்களுக்கு பேட்டிங் செய்ய எளிதாக இருக்காது என்பதுதான் திட்டம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை