IND vs SL: இலங்கை அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 18ஆம் தேதி கொழும்புவில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் மும்முறமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்த அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான குசால் பெரேரா தோள்பட்டை காயம் காரணமாக இந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார்.
தற்போது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் பினுரா ஃபெர்னாண்டோவும் காயம் காரணமாக இந்திய அணியுடனான ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்து இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
முன்னதாக இங்கிலாந்து தொடரின் போது பயோ பபுள் விதிகளை மீறியதாக குசால் மெண்டிஸ், டிக்வெல்லா, குணத்திலக ஆகியோர் இடைநீக்க செய்யப்பட்ட நிலையில், தற்போது இலங்கை அணியின் முக்கிய வீரர்களும் அடுத்தடுத்து காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.