ஷமி குதிரையைப் போன்றாவர் - கவாஸ்கர் புகழாரம்!

Updated: Sun, Mar 13 2022 15:54 IST
Image Source: Google

இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி 86 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட் இழந்தது.

இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 3 விக்கெட்டையும், முகமது ஷமி 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். அதன்பின் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி மீதமிருந்த விக்கெட்டுகளை 24 ரன்களுக்கு இழந்தது. 

இந்நிலையில் இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், “முகமது ஷமி ஒரு குதிரை மாதிரி. குதிரை எப்படி வேலை செய்யுமோ அதே மாதிரி தான். ஒவ்வொரு பந்தையும் முழு வேகத்துடன் வீசுவார். எவ்வளவு நேரம் பந்துவீசினாலும், அவரது வேகம் குறையாது.

ஒரு சிலர் 4 ஓவர் மட்டும் தான் தொடர்ந்து வீச முடியும். அதன் பிறகு அவர்கள் சோர்வாகிவிடுவார்கள் . ஆனால் முகமது ஷமி முதல் ஓவர் வீசுவது போல் 6 அல்லது 7 ஓவர்களை தொடர்ந்து வீச முடியும். ஒவ்வொரு பந்து மூலம் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை முகமது ஷமி ஏற்படுத்தி வருகிறார்.

இது போன்ற தகுதிகள் உடைய பந்துவீச்சாளர்கள் உங்களுக்கு முக்கியம். ஆனால் ஒரு சிலர் வேகப்பந்துவீச்சாளர்கள் என்பதையே மறந்து விடுகின்றனர். இந்தியாவின் வேகப்பந்துவீச்சு டாப் கிளாசாக உள்ளது. முகமது ஷமி, பும்ரா ஆகியோர் புதிய பந்தை சிறப்பாக கையாளக் கூடியவர்கள்

3ஆவது வேகப்பந்துவீச்சாளராக முகமது சிராஜ் உள்ளார். அவரும் சிறப்பாக பந்துவீசக்கூடியவர். இது தவிர உமேஷ் யாதவ் இருக்கிறார். இதனால் இந்தியாவுக்காக பல போட்டிகளில் விளையாடிய இஷாந்த் சர்மாவுக்கு கூட தற்போது வாய்பபு கிடைக்கவில்லை. இந்திய கிரிக்கெட்டுக்கு இது உண்மையிலேயே சிறந்த காலங்கள்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை