IND vs WI, 1st T20I: பூரன் அரைசதம்; இந்தியாவுக்கு 158 இலக்கு!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்ட் கிங் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த கைல் மேயர்ஸ் - நிக்கோலஸ் பூரன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பின்னர் 31 ரன்கள் எடுத்த நிலையில் கைல் மேயர்ஸ் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரோஸ்டன் சேஸ், ரோவ்மன் பாவல் ஆகியோர் அறிமுக வீரர் ரவி பிஸ்னோயின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்ஷப் படேலிடம் விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கீரன் பொல்லார்ட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் ரவி பிஸ்னோய், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.