இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

Advertisement

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோரின் அரைசதத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி, ரிஷப் பந்த் தலா 52 ரன்களைச் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ் 9 ரன்களிலும், பிராண்டன் கிங் 22 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரன் - ரோவ்மன் பாவல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். அதன்பின் 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழந்தார்.

Advertisement

இதனால் ஆட்டத்தில் பரப்பரப்பு தொற்றிக்கொண்டது. இதனால் கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற 25 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 

இந்திய அணி தரப்பில் கடைசி ஓவரை ஹர்ஷல் படேல் வீச, அதனை எதிர்கொண்ட ரோவ்மன் பாவல் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்ட ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு வரவழைத்தார். 

இருப்பினும் ஹர்ஷல் படேல் சிறப்பாக பந்துவீசி போட்டியை கட்டுக்குள் கொண்டுவந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 178 ரன்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. 

Advertisement

இதன்மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன், டி20 தொடரை 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News