IND vs WI: ஈடன் கார்டனில் பார்வையாளர்களுக்கு அனுமதி!

Updated: Tue, Feb 01 2022 10:36 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. 
வரும் பிப்ரவரி 6ஆம் தேதி துவங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்திய சுற்றுப் பயணத்தில் முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் பின்னர் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் நடைபெற உள்ளது. 

இந்தொடரில் பங்கேற்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய ஒருநாள் மற்றும் டி20 தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி முதல் முறையாக ரோஹித் சர்மா தலைமையில் சாதாரண வீரராக விளையாட உள்ளார்.

மேலும் இத்தொடரில் ஒருநாள் போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்திலும், டி20 போட்டிகள் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்திலும் நடைபெறும் பிசிசிஐ அறிவித்துள்ளது. 

இந்நிலையில் ஈடன் கார்டனில் நடைபெறும் போட்டிகளுக்கு 75 சதவித பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பெங்கால் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவர் அவிஷேக் டால்மியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “விளையாட்டு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்ததற்காகவும், 75 சதவீத பார்வையாளர்களை மீண்டும் மைதானத்திற்கு அனுமதித்ததற்காகவும் மாண்புமிகு முதல்வர் மம்தா பானர்ஜி, தலைமைச் செயலாளர் மற்றும் மேற்கு வங்க அரசு ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை