IND -W vs ENG -W 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, Dec 06 2023 14:06 IST
IND -W vs ENG -W 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)

ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அடங்கிய தொடரில்  விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடக்கிறது.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி கடந்த செப்டம்பரில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பிறகு பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோற்ற நிலையில் இங்கிலாந்து அணி இந்த தொடரில் களம் இறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்க தீவிர முயற்சி காட்டும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs இங்கிலாந்து மகளிர்
  • இடம் - வான்கடே கிரிக்கெட் மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7 மணி 

பிட்ச் ரிப்போர்ட்

டி20 கிரிக்கெட் வரலாற்றில் வான்கடே கிரிக்கெட் மைதான பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் தொடக்க ஓவர்களில் பந்துவீச்சாளர்களால் இந்த மைதானத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். மேலும் இங்கு நடைபெற்றுள்ள 9 சர்வதேச டி20 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 4 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 5 முறையும் வெற்றியைப் பெற்றுள்ளன. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.

நேரலை

ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இந்தப் போட்டியை ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 27
  • இந்திய மகளிர் அணி - 07
  • இங்கிலாந்து மகளிர் அணி - 20

உத்தேச லெவன் 

இந்தியா: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஹர்மன்ப்ரீத் கவுர்(கே), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரகர், ரேணுகா சிங் தாக்கூர், மின்னு மணி, சைகா இஷாக்.

இங்கிலாந்து: டேனியல் வெயிட், சோபியா டங்க்லி, ஹீதர் நைட் (கே), ஆலிஸ் கேப்ஸி, நாட் ஸ்கைவர்-பிரண்ட், எமி ஜோன்ஸ், டேனியல் கிப்சன், சாரா கிளென், சோஃபி எக்லெஸ்டோன், மஹிகா கவுர், லாரன் பெல்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - எமி ஜோன்ஸ்
  • பேட்ஸ்மேன்கள்- ஹீதர் நைட், ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கேப்டன்), தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ஆலிஸ் கேப்ஸி
  • பந்து வீச்சாளர்கள்- சோஃபி எக்லெஸ்டோன் (துணை கேப்டன்), ரேணுகா சிங் தாக்கூர், மஹிகா கவுர்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை