ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரானது இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்ததின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஆர்யன்ஷ் சர்மா - மயங்க் ராஜேஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆர்யன்ஷ் ஒரு ரன்னிலும், மயங்க் ராஜேஷ் 10 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய ராகுல் சோப்ரா ஒருபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், மறுமுனையில் அவருடன் இணைந்து விளையாடிய நிலான்ஷி கேஸ்வானி 5 ரன்னிலும், விஷ்னு சுகுமாரன் ரன்கள் ஏதுமின்றியும், ஹைதர் அலி 4 ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ராகுல் சோப்ராவுடன் இணைந்த கேப்டன் பசில் ஹமீத்தும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.

அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பசில் ஹமீத் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து கள்மிறங்கிய சஞ்சித் சர்மா, முகமது ஃபரூக், முகமது ஜவதுல்லா ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் சோப்ரா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இறுதியில் ராகுல் சோப்ரா 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 50 ரன்களில் விக்கெட்டை இழக்க, ஐக்கிய அரபு அமீரக அணியானது 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரஷிக் தார் சலாம் 3 விக்கெட்டுகளையும், ரமந்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இந்திய அணி இலக்கை நோக்கி விளையாடவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News