கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தார் பின்னி!

Updated: Mon, Aug 30 2021 10:43 IST
India all-rounder Stuart Binny announces retirement with immediate effect (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் ஸ்டூவர்ட் பின்னி.1983 கிரிக்கெட் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் உறுப்பினர் ரோஜர் பின்னியின் மகனும் ஆவார்.

இந்திய அணிக்காக 2014-16ஆம் ஆண்டுகளுக்கு இடையே 6 டெஸ்ட் போட்டிகள், 14 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 3 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 194 ரன்களையும் 3 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார், ஒருநாள் போட்டிகளில் 230 ரன்களும் 20 விக்கெட்டுகளையும், டி20-யில் 24 ரன்கள் 1 விக்கெட்டையும் எடுத்துள்ளார்.

ஸ்டூவர்ட் பின்னியின் மறக்க முடியாத ஒரு பந்து வீச்சு எது என்றால் 2014ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் போட்டி ஒன்றில் அனில் கும்ப்ளேயின் சிறந்த பவுலிங் சாதனையை முறியடித்தார். 4.4 ஓவர்களில் 4 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தை 58 ரன்களுக்குச் சுருட்டினார். இந்தப் பந்து வீச்சு உலக சாதனையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இந்நிலையில் அனைத்து வகையிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பின்னி இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஸ்டூவர்ட் பின்னி “கிரிக்கெட் என் ரத்தத்தில் ஓடுகிறது. எனக்கு அனைத்தையும் வழங்கிய கிரிக்கெட்டுக்கு நான் திருப்பி கொடுப்பேன். அடுத்த இன்னிங்ஸிற்காக உங்கள் ஆதரவுக்கு என் நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை