இந்தியா - அயர்லாந்து போட்டி அட்டவணை அறிவிப்பு!

Updated: Wed, Jun 28 2023 11:43 IST
Image Source: Google

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரைத் தொடர்ந்து இந்தியா வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த தொடரைத் தொடர்ந்து ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடரும் நடக்க உள்ளது.

அதற்கு முன்னதாக இந்திய அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில், இந்தியா மற்றும் அயர்லாந்து தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. விரைவில் டி20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையில் டி20 தொடர் நடக்கிறது.

அயர்லாந்து தொடர் குறித்து அயர்லாந்து கிரிக்கெட் அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான வாரன் டியூட்ரோம் கூறுகையில், “12 மாதங்களில் 2 ஆவது முறையாக அயர்லாந்திற்கு வருகை தரும் இந்திய அணியை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். கடந்த ஆண்டு 2 டி20 போட்டிகள் நடந்தது. ஆனால், இந்த முறை 3 டி20 போட்டிகள் நடக்கிறது. இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத நிகழ்வை அனுபவிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

மேலும், இந்தியாவின் பிஸியான பயணத்திட்டத்திலும் கூட அயர்லாந்தை தொடர்ந்து சேர்த்துக் கொண்டதற்கும், போட்டிகள் முடிந்தவரை ரசிகர்களுக்கு ஏற்றவாறு அட்டவணையை உறுதி செய்ய எங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் பிசிசிஐக்கு மனமார்ந்த நன்றிகள். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்தியா - அயர்லாந்து டி20 தொடர்:

  • ஆகஸ்ட் 18 – இந்தியா – அயர்லாந்து – முதல் டி20 (மலாஹிட், பிற்பகல் 3 மணி)
  • ஆகஸ்ட் 20 - இந்தியா – அயர்லாந்து – 2ஆவது டி20 (மலாஹிட், பிற்பகல் 3 மணி)
  • ஆகஸ்ட் 23 - இந்தியா – அயர்லாந்து – முதல் டி20 (மலாஹிட், பிற்பகல் 3 மணி)
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை