ஐசிசி டெஸ்ட் தரவரிசை: மீண்டும் முதலிடத்தைப் பிடித்த இந்திய அணி!

Updated: Mon, Dec 06 2021 15:30 IST
India become number one ranked Test team after NZ series win (Image Source: Google)

கடந்த சில ஆண்டுகளில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அதிக காலம் முதலிடத்தில் இருந்துவரும் அணி இந்திய அணி தான். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை ஜெயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்தது.

இதையடுத்து இந்திய அணியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்தது நியூசிலாந்து அணி. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என வென்றதையடுத்து தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது இந்திய அணி.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக 119 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2ஆம் இடத்தில் இருந்தது இந்திய அணி. இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், 2ஆவது டெஸ்ட்டில் 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வென்றதையடுத்து, 124 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது இந்திய அணி.

மேலும் 121 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2ஆம் இடத்தில் நியூசிலாந்து அணியும், 108 மற்றும் 107 புள்ளிகளுடன் முறையே ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 3 மற்றும் 4 இடங்களில் உள்ளன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை