சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டினார் ரோஹித் சர்மா!

Updated: Sun, Sep 04 2022 22:14 IST
Image Source: Google

2022 ஆசியக் கோப்பை டி20 போட்டியின் முதல் சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களைறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களை சேர்த்தது. 

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 28 ரன்களைச் சேர்த்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனித்துவமான சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். .

தற்போது 35 வயதான ரோகித் சர்மா, ஆடவர் கிரிக்கெட்டில் அதிக டி20 கிரிக்கெட்டில் விளையாடி, அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனை படைத்திருந்தார். இன்றைய ஆட்டத்தின்போது, டி20 போட்டிகளின் வரலாற்றில் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அதிக ரன்கள் எடுத்தவர் என்ற புதிய சாதனை படைத்தார்.

நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ் இதுவரை 131 டி20 போட்டிகளில் விளையாடி 3531 ரன்கள் எடுத்து முதல் இடத்தை தக்கவைத்திருந்தார். இதில் ரோஹித் சர்மா 3,520 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்தார். 

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் ரோகித் 12 ரன்களை கடந்தபோது, சூஸி பேட்ஸின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை