இப்போட்டியில் இந்திய இனி மீண்டு வர முடியாது - மைக்கே வாகன்!

Updated: Fri, Aug 27 2021 13:17 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25ஆம் தேதி லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 78 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து சொதப்பியது. இந்தியாவை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியில் ஓபனர்கள் ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோர் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஆட்டத்தின் முதல் பந்து முதலே சீரான வேகத்தில் ரன்களை அவர்கள் குவித்ததால் இங்கிலாந்து அணி 100 ரன்களை எளிதாக கடந்தது. 

பின்னர் நேற்று நடைபெற்ற 2வது நாள் ஆட்டத்தில் ரோரி பேர்ன்ஸ் 61 ரன்களுக்கும், ஹசீப் 68 ரன்களுக்கும் வெளியேறினர். இந்த ஜோடியை முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா பிரித்தனர். அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் சதமடித்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

இதன் மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 423/8 ரன்களை எடுத்திதுள்ளது. இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 345 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் இந்த டெஸ்டில் தோல்வியடைவதிலிருந்து தப்பிக்க இந்திய அணி கடுமையாகப் போராட வேண்டிய நிலையில் உள்ளது. 

இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் சரியாக செயல்படாதது குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “புஜாரா மிக மோசமாக விளையாடியுள்ளார். அவர் ஆழ்கடலில் எதையோ தொலைத்தது போன்று ஏதும் அறியாமல் விளையாடி வருகிறார். அவர் தனது ஆற்றல் திறன், விளையாட்டு திறன் என அனைத்தையும் இழந்துவிட்டார். அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்று நினைத்து விளையாடாமல், எப்படியாவது தனது இடத்தை காப்பாற்றி களத்தில் நின்றுவிட வேண்டும் என தடுப்பாட்டம் செய்து வந்தார். இதனை புரிந்துக்கொண்ட ஆண்டர்சன் சுலபமாக விக்கெட் எடுத்தார்.

இந்திய அணி பெரும் சிக்கலில் உள்ளது. குறிப்பாக ரோகித் சர்மா தான், எப்படியாவது நின்றுவிட்டால் போதும் என்பது போல விளையாடினார்.இதே போல தான் ரவீந்திர ஜடேஜாவும். இவர்கள் அனைவருமே நல்ல வீரர்கள். ஆனால் அணியில் இடத்தை தக்கவைக்க பதற்றத்துடன் ஆடி அவுட்டாகி விட்டனர். இவர்களுக்கெல்லாம் மேலாக ரிஷப் பண்ட். அவரின் ஆட்டம் இது கிடையவே கிடையாது. ஒரு ஷாட்டை கூட முழுமையாக ஆடவில்லை. அனைத்து ஷாட்களையுமே அடிக்கலாமா வேண்டாமா என்பது போல தயக்கத்துடன் ஆடி வெளியேறினார். 

Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இந்திய அணி இனி மீண்டு வருவது மிகப்பெரும் போராட்டமாக இருக்கும். ஏனென்றால் இங்கிலாந்து வீரர்களின் மனநிலை மிக நம்பிக்கையுடன் உள்ளது” எனத்தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை