டி20 உலகக் கோப்பை 2022 தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.டி20 உலகக் கோப்பை 2022 தொடர் சூப்பர் 12 சுற்றின் லீக் ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Advertisement

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே தனியொருவனாக நின்று 40 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 68 ரன்களை குவித்து அசத்தினார். மற்றவர்களில் யாரும் 20 ரன்களை கூட தொடவில்லை. குறிப்பாக ரோஹித் ஷர்மா 15 (14), கோலி 12 (11) இருவரை தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே அடித்தனர். இதனால், இந்திய அணி 20 ஓவர்களில் 133/9 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் லுங்கி இங்கிடி 4 விக்கெட்டுகளையும், வெய்ன் பார்னெல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Advertisement

இலக்கை துரத்திக் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டி காக் 1 (3), ரூஸோவ் 0 (2) ஆகியோரை அர்ஷ்தீப் சிங் அடுத்தடுத்து வெளியேற்று கெத்து காட்டினார். தொடர்ந்து பவுமாவும் 10 (15) பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து எய்டன் மார்க்கரம், மில்லர் இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

பிட்சில் பந்துகள் ஸ்விங் ஆகாத காரணத்தினால் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினை, இருவரும் அதிரடியாக எதிர்கொண்டனர். இதனால், அஸ்வினுக்கு 3 ஓவர்களை மட்டும் கொடுத்துவிட்டு, கடைசி ஓவரை வழங்கவில்லை. இந்நிலையில் 18 பந்துகளில் 25 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற நிலை வந்தபோது வேறு வழியிம்மால், அஸ்வினுக்கு ரோஹித் ஓவரை வழங்கினார். 

மில்லர் இரண்டு சிக்ஸர் அடித்து 13 ரன்களை சேர்த்தால், தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக மாறியது. இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 19.4 ஓவர்களில் 137/5 ரன்களை சேர்த்து, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இதில் அதிகபட்சமாக ஐடன் மார்க்கரம் 52 ரன்கலையும், டேவிட் மில்லர் 59 ரன்களையும் சேர்த்தனர்.

இப்போட்டியில் வென்ற தென்ன் ஆப்பிரிக்க அணி 5 புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தில் இந்திய அணி 4 புள்ளிகளுடன் உள்ளது. பாகிஸ்தான் அணியும் 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 2 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோற்றால் மட்டுமே, பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு இருக்கும். ஆனால், இரண்டு அணிகளும் கத்துக்குட்டி அணிகளுடன் விளையாட உள்ளதால், இரு அணிகளும் இரண்டு போட்டிகளிலும் தோற்ற வாய்ப்பு மிகமிக குறைவுமான்.

Advertisement

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் சோயிப் அக்தர், பாகிஸ்தான் அணியை இந்தியா வெளியேற்றிவிட்டது எனக் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘‘தென் ஆப்பிரிக்காவிடம் தோற்று, பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பை இந்தியா அழித்துவிட்டது. பாகிஸ்தான் மிகவும் மோசமாக விளையாடினார்கள். பாகிஸ்தான் அணி, அரையிறுதிக்கு செல்வதை அடுத்தவர்களை வைத்து தீர்மானிக்கும் நிலைக்கு வந்தது தவறு.

ஆசிய அணிகள் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறும் என்பதை, இந்திய அணி மீண்டும் நிரூபித்துவிட்டது. மீண்டும் இந்திய அணி வலிமையுடன் திரும்பும் என நம்புகிறேன். குரூப் பி பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு செல்வது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது’’ என தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News