இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இதன் காரணமாக தற்போது நடைபெற்று வரும் நான்காவது போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Advertisement

இந்த போட்டியில் விளையாடிய முன்னணி வீரர்கள் பலரும் சொதப்பிய நிலையில் துணை கேப்டன் ரஹானே மீது பெரிய அளவு விமர்சனம் எழுந்துள்ளது. ஏனெனில் கடைசியாக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் அடித்த ரஹானே மற்றபடி இந்த தொடரில் பெரிய அளவு ரன்களை குவிக்கவில்லை. மொத்தம் ஆறு இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள அவர் 109 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

Advertisement

இதன் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் பெரிய அளவில் எழுந்துள்ளன. தற்போது நடைபெற்று வரும் 2 ஆவது இன்னிங்சிலும் ரஹானே டக் அவுட் ஆகியுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா, ரஹானேவுக்கு பதில் ஹனுமா விஹாரி அல்லது சூர்யகுமார் யாதவிற்கு ஏன வாய்ப்பு வழங்கவில்ல என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ரஹானே மட்டுமல்ல இந்திய அணியின் மிடில் ஆர்டர் மோசமாக உள்ளது. இதனால் அவரது இடம் குறித்து இந்திய அணி யோசிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சூரியகுமார் யாதவ், ஹனுமா விஹாரி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும். இன்னும் அவர்களுக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது எனக்கு புரியவில்லை.

இலங்கை தொடர் முடிந்த பின்னர் இருவரை அழைத்து வந்து இங்கு அமர வைப்பது ஏன் ? சூர்யகுமார் யாதவ் அனைத்து கண்டிஷனிலும் ஸ்கோர் செய்யக்கூடிய வீரராக தெரிகிறார். அவருக்கு வாய்ப்பு கொடுத்துப் பார்க்க வேண்டும் என்பதே எனது கருத்து” என தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News