சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இந்தியாவிற்கு மாற்றம்?

Updated: Thu, Nov 14 2024 22:20 IST
Image Source: Google

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது.  

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்து வருவதுடன், தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்தும் படியும் கோரிக்கை வைத்தாக தகவல் வெளியானது. இருப்பினும் இந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் மட்டுமே நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி உறுதியாக உள்ளார். ஆனால் தற்போதைய நிலையில் இது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

அதே நேரத்தில், சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி இப்போது இந்த தொடரை ஹைபிரிட் மாடலில் விளையாட பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளாவிட்டால், தொடரை நடத்தும் ஹோஸ்டிங் உரிமையை அவர்களிடமிருந்து பறிக்க ஐசிசி முடிவு செய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய அணிக்கான போட்டிகளை நடத்த ஹைப்ரிட் மாடலை பின்பற்றுமாறு பாகிஸ்தானுக்கு ஐசிசி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

ஒருவேளை இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உடன்படவில்லை என்றால், இத்தொடரானது முழுமையாக தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்படும் என்றும், அதற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் ஐசிசி இறங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் மட்டுமெ நடத்த உறுதியாக இருந்து வருகிறது. 

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில் இத்தொடரில் இருந்து பாகிஸ்தானில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற ஐசிசி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் விலகும் பட்சத்தில் இத்தொடரை நடத்த முதல் தேர்வாக இந்தியா இருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்தகவலால் இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனார். இருப்பினும் இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகாதது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை