டி20 உலகக்கோப்பை: பந்துவீச்சில் தடுமாற்றமடைந்த இந்தியா!

Updated: Tue, Oct 19 2021 13:09 IST
Image Source: Google

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்.17ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. வரும் 23ஆம் தேதி முதல் சூப்பர் 12 பிரிவு போட்டிகள் நடைபெறும். இதில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வரும் அக்டோபர் 24ஆம் தேதியன்று முதல் போட்டியாக பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இதற்கு பயிற்சி மேற்கொள்ளும் வகையில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் 2 பயிற்சி போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எனினும் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்தது.  இந்திய அணி தரப்பில் முன்னணி பவுலர்களின் ஓவர்கள் சிதறடிக்கப்பட்டன. இந்த டி20 உலகக்கோப்பைக்கு முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோரையே வேகப்பந்துவீச்சில் நம்பியுள்ளது. 

நேற்றைய போட்டியில் 4 ஓவர்களை வீசிய புவனேஷ்வர் குமார் மொத்தமாக 54 ரன்களை வாரி வழங்கினார். பதிலுக்கு ஒரு விக்கெட்டை கூட அவர் எடுத்துக் கொடுக்கவில்லை. இதே போல மற்றொரு சீனியர் வீரரான முகமது ஷமி 4 ஓவர்களில் 3 விக்கெட்களை எடுத்தார். எனினும் அவரின் ஓவர்களில் 40 ரன்களை பறந்தன.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஆனால் அஸ்வின் மட்டும் தனது திறமையை நிரூபித்தார். கடந்த 2017ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் அவர், நேற்று தான் விளையாடிய முதல் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 23 ரன்களை மாட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் அவரின் மீது அனைவருக்கும் இருந்த சந்தேகங்கள் விலகியுள்ளது. இந்த அனைத்து தவறுகளையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சரி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை